Kirubai Migunthu Ennai Ninaitheer

என்ன செய்வேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்
சிலுவை சுமந்து என் பாவம் தீர்த்தீர்
மகிமை துறந்து சாபம் நீக்கினீர்
விழுந்திடாமல் தூக்கியெடுத்தீர்
என்னசெய்வேன் நல் இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன் -2
ஆவி ஆத்துமா சரீரம் படைக்கின்றேன் (2)
கடாவின அங்கம் தீயைப்போல் எரிய
விடும் மூச்சுக்கூட வேதனையைக் கூட்ட
கொடிய காயங்கள் கோரமாய் பட்சித்தும்
விடாமல் என்னை இரட்சித்தீரே – என்ன செய்வேன்
அருகதையற்ற எந்தன் மேலும்
கிருபை காட்டி தெரிந்தெடுத்தீர்
அருமை மகனாய் என்னை அணைத்து
கிறிஸ்தென்னும் கொடியில் இணைத்திட்டீர் – என்ன செய்வேன்