kirubai neerae

உறுதியாய் உம்மை என்றும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உறுதியாய் உம்மை என்றும் பற்றி கொண்டேன்
நான் நம்பி வரும் உறைவிடம் என்றும் நீரே
கலக்கம் இல்லாமல் ஓடி வந்தேன்
கண்கலங்காமல் காத்திடும் தகப்பன் நீரே
நான் நினைப்பதிலும் அதிகம் செய்பவரே
நான் கேட்பதிலும் அதிகம் தருபவரே
கிருபை நீரே கிருபை நீரே
மாறாத கிருபை நீரே
கிருபை நீரே கிருபை நீரே
விலகாத கிருபை நீரே
1. தூரத்தில் நிற்காமல் ஆபத்தில் காத்து
சிங்கத்தின் கெபியில் தப்புவித்தவர்
என் ஆத்துமாவை நீர் பெலப்படுத்தி
என்னாளும் வெற்றி தருவீர்
என் ஆத்துமாவை உம்மில் ஸ்திரப்படுத்தி
என் தலை நிமிர செய்திடுவீர்
கிருபை நீரே கிருபை நீரே
மாறாத கிருபை நீரே
கிருபை நீரே கிருபை நீரே
விலகாத கிருபை நீரே
2. என்னை நீர் அழைத்து
என் கரம் பிடித்து
உம்மோடு என்றென்றும் அமர செய்தீர்
உன் ராஜ்ஜியத்தின் (சொந்த) பிள்ளையாக
சிலுவையில் உறுதி செய்தீர்
கிருபை நீரே கிருபை நீரே
மாறாத கிருபை நீரே
கிருபை நீரே கிருபை நீரே
விலகாத கிருபை நீரே
உறுதியாய் உம்மை என்றும் பாடல் வரிகள், Uruthiyaai Ummai Entrum Lyrics