Kirubaiyinale Meetkappatten

கிருபையினாலே மீட்கப்பட்டேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபையினாலே மீட்கப்பட்டேன்
அன்பினாலே அணைக்கப்பட்டேன்(2)
தேவ ஆவியால் நிரப்பப்பட்டேன்
கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானேன் (2)
இரத்தத்தால் ஜெயம்
தழும்புகளால் சுகம்
வார்த்தையாலே வாழ்வு வளம்(2)
கிருபையில் வாழ்வதே என்பாக்(கி)யம் (4)
சரணம்
சிலுவையினால் நான் வாழ்வடைந்தேன்
கிறிஸ்துவுடன் நான் இணைக்கப்பட்டேன்(2)
வாழ்வது இனி நான் அல்ல
கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார்.
வார்த்தையினாலே வாழ்வு பெற்றேன்
வல்லமையினாலே நிரப்பப்பட்டேன்.
அழிவில்லாத வசனத்தினாலே,
ஆசிர் அனைத்தையும் அருளப்பெற்றேன்.