Kollai Noyal Thavippore

கொள்ளை நோயால் தவிப்போரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை இயேசு அழிப்பார்
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார்.
தவறினை நாம் உணர்ந்தால் மன்னிக்கவல்லவர் – நம்
தவறினை நாம் உணர்ந்தால் மன்னிக்கவல்லவர்
பிள்ளையைப்போல் நம்மை அவர் அணைப்பார் – 2
சரணம்
கட்டளையை மீறினால் காய்ச்சல் வருமென்றீர்
வானமும் அடையும் கொள்ளை நோயும் வருமென்றீர்
நம்மை தாழ்த்தி அவரிடம் வேண்டிட்டால்
பரிகாரியானவர் பரிகாரம் தந்திடுவார்
பொல்லாத வழிவிட்டு திரும்பியே வந்திட்டால்
மன்னித்து நோய்களை குணமாக்கமாட்டிரோ – யஹோவா ராஃஹா
குணமாக்கமாட்டிரோ
சரணம்
கடலை உலர்ந்த தரையாய் மாற்றினீரே
மக்களை கால்நனையாமல் கடக்க செய்தீரே
கலங்காதே திகையாதே உடனிருப்பேன் என்றீரே
உமைதேடுகின்றோரை கைவிடேன் என்றீரே
இக்கட்டுநேரத்தில் தஞ்சமும் நீரன்றோ
நோய் நொடி பிணி தீர்த்து காத்திடுவீரே – யஹோவா ராஃஹா
சுக வாழ்வு தருவீரே