kondaadu kondaadu manamagilinthu

கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொண்டாடு கொண்டாடு
மனமகிழ்ந்து கொண்டாடு
கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு
கைகள் கொட்டியே தாளம் தட்டியே
கர்த்தர் நாமம் பாடிடு – 2
1. பார்வோன் சேனையை கடலில் அழித்தார்
கர்த்தர் ஜெயத்தை பாடிடு சாத்தான்
சேனையை சிலுவையில் ஜெயித்தார்
மீட்பர் ஜெயத்தை பாடிடு
2. மாம்சத்தோடும் ரத்தத்தோடும்
போராட்டம் நமக்கு இல்லையே
வானமண்டல பொல்லாத ஆவிகள்
நம்மை ஜெயிப்பதில்லையே
3. தேவன் தந்திட்ட சர்வ ஆயுதம்
கையில் ஏந்திடுவோமே
பிசாசின் தந்திர வலைகளை அறுத்து
ஜெபத்தில் ஜெயித்திடுவோமே