konysa neram iraiva konysi pesa ventum

கொஞ்ச நேரம் இறைவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

கொஞ்ச நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும்
கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் – 2
உன் மடி அமர்ந்து உன் மடி தவழ்ந்து
உன்னோடு நான் பேச வேண்டும்
கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் – 2
என் அன்பு தாயாக உன் அன்பு சேயாக
உன்னோடு நான் பேச வேண்டும்
உன் குரலை நான் கேட்டு உனை என்றும் தியானித்து
உன் நிழலில் நான் வாழ வேண்டும்
கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் – 2
என் ஆயன் நீயாக உன் சீடன் நானாக
உன்னோடு நான் வாழ வேண்டும்
உன் ஞானம் எனக்களித்து உன் வழியில் எனை நடத்தி
உன் உருவாய் எனை மாற்ற வேண்டும் -2
கொஞ்ச நேரம் இறைவா பாடல் வரிகள், Konjam Neram Iraiva Lyrics