koota kooti nanri solven

கோடா கோடி நன்றி சொல்வேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கோடா கோடி நன்றி சொல்வேன்
கண் உறங்காமல் என்னை காத்த
அதிசய தேவன் வல்ல தேவன்
அரணாய் என்னோடிருக்கிறர்
அதிசய தேவன் வல்ல தேவன்
அழகாய் என்னை நடத்தினார்
அவர் செய்வது எல்லாம் வாய்க்குமே
அவர் சொல்வது எல்லாம் நிற்குமே – 2
என் உயர்வும் என் தாழ்வும் அவரே
என் பெலனும் என் துணையும் அவரே – 2
நன்றி சொல்லிடுவேன் ஆயுள் உள்ளவரை
நன்றி சொல்லிடுவேன் நன்மை செய்தவர்க்கே – 2
திறமை எதிர்பார்க்கும் உலகிலே
தூக்கிட கரங்கள் இல்லையே – 2
என் எதிர்காலத்தை அறிந்தவர்
உயர்த்தினார் தம் தோழனாய்
என் எதிர்காலத்தை அறிந்தவர்
உயர்த்துவார் தம் தோழனாய்
தேவைகள் என்னை நெறுக்கினாலும்
மனிதரும் என்னை ஒடுக்கினாலும் – 2
வாக்குத்தத்தம் செய்தவர்
தம் வாக்கை நிறைவேற்றி நடத்தினார்
வாக்குத்தத்தம் செய்தவர்
தம் வாக்கை நிறைவேற்றி நடத்துவார்
கோடா கோடி நன்றி சொல்வேன் பாடல் வரிகள், Koda kodi nandri solven Lyrics