Kozhi Than Kunjukalai

கோழி தன் குஞ்சுகளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.கோழி தன் குஞ்சுகளை
கூட்டி சேர்ப்பது போல-2
கூவி அழைக்கிறாரே
ஜீவன் தந்த இரட்சகர்-2-கோழி
2.சாக்கு போக்கு சொல்லாமல்
ஜல்தியாய் ஓடி வந்து-2
காக்கும் செட்டைகளின் கீழ்
கண்டடைவாய் இரட்சிப்பை-2-கோழி
3.தினமும் ஜெபிப்பதாலும்
வேதம் வாசிப்பதாலும்-2
திட்டமாய் இயேசு நாதர்
செட்டையின் கீழ் இருப்பாய்-2-கோழி