kulir kala karre konysam methuvaka – Kulirkala Kaatre Konjam Methuvaga

குளிர் கால காற்றே கொஞ்சம் மெதுவாக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

குளிர் கால காற்றே கொஞ்சம் மெதுவாக – Kulirkala Kaatre Konjam Methuvaga
குளிர் கால காற்றே கொஞ்சம் மெதுவாக வா
குழந்தை இயேசு தூங்கும் நேரம் இதமாக வா
மார்கழி மாத காற்றில் வெண்பனி தூவும்
கண்மணி உந்தன் தேகம் குளிரினால் வாடும்
வானெங்கும் பனிமய காற்று வீசிடும் போது மழலையும் அழுதிடும்
1.அன்னை மடி மீதில் சாய்ந்து உறங்கும் நேரம்
வானில் தோன்றும் விண்மீன் ஒளியில்
வெப்பம் தர வேண்டும் (2)
மார்கழி மாத காற்றில் வெண்பனி தூவும்
கண்மணி உந்தன் தேகம் குளிரினால் வாடும்
வானெங்கும் பனிமய காற்று வீசிடும் போது மழலையும் அழுதிடும்
2.தேவ தூதர் பாடும் கானமதை கேட்டு
தேவ மைந்தன் கண் மயங்கி
தூங்கி விட வேண்டும் (2)
மார்கழி மாத காற்றில் வெண்பனி தூவும்
கண்மணி உந்தன் தேகம் குளிரினால் வாடும்
வானெங்கும் பனிமய காற்று வீசிடும் போது மழலையும் அழுதிடும்