Kulirkaaala Iravu onnu christmas song lyrics

குளிர்கால இரவு ஒன்னு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

குளிர்கால இரவு ஒன்னு
பெத்தலகேம் ஊருல
மாட்டு தொழுவத்துல
பிறந்தாரு எங்க மன்னவரு
நட்சத்திர கூட்டம் எல்லாம்
அவர பார்த்து கண் சிமிட்டும்
வாடகாத்தும் அவருக்காக
கொஞ்சம் மெதுவாத்தா வீசும்
அன்னை மரி மடி மேல
சின்ன பாலனாய் தவழ்ந்தாரு
நாசரேத்து ஊர்ல தான்
மன்னாதி மன்னன் வளர்ந்தாரு
என்னையும் உன்னையும் மீட்க
தன்னைத்தானே தாழ்த்தினாருங்க
சிங்காசனம் விட்டிறங்கி
பாவ உலகினில் வந்தவரு
பரலோகத்தின் மகிமை எல்லாம்
நமக்காகத்தான் துறந்தவரு
என்னையும் உன்னையும் உயர்த்த
தன்னைத்தானே தாழ்த்தினாருங்க