kuruvutan sernthu kutumpangkal inainthu

குருவுடன் சேர்ந்து குடும்பங்கள்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து
திருப்பலி நிறைவேற்றுவோம்
தன்னலம் மறந்து பிறநலம் காக்கும் திருச்சபை ஆகிடுவோம்
நாம் வருவோம் பலியில் இணைவோம் இறையன்பில்
நாமும் வளர்வோம்
கடவுளைத் தேடும் அறிவே
உலகில் ஞானத்தின் முதல்நிலை- அந்த
ஞானத்தில் நிலைத்து தியாகத்தில்
வாழ்ந்தால் அதுவே இறை நிலை
இயேசுவின் தலைமையில் இறையாட்சி மலர
இறைமக்கள் வருவோம்
இறைவனைப் புகழ்வோம் —நாம் வருவோம்
நம்பிக்கையோடு வாழ்ந்திடும்போது மானுடம்
உயர்வு பெறும்-இறை
நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடும்போது
வாழ்வே முழுமை பெறும்
தந்தையை நம்பி தன்னுயிர் தந்த
இயேசுவின் பலியில் நாமும் இணைவோம்—நாம் வருவோம்