kuthirai yuththaththukku

குதிரை யுத்தத்துக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

குதிரை யுத்தத்துக்கு
ஆயத்தம் ஆகிடும்
ஜெயமோ கர்த்தராலே வந்திடும்
இரட்சிக்க குதிரையின் பெலன் விருதா
காத்திட அதனின் வீரியம் விருதா
இரதத்தை குறித்தும் குதிரையை குறித்தும் மேன்மை பாராட்டிடேன்
கர்த்தரிடமிருந்தே வரும்
ஜெயமோ கர்த்தரிடமிருந்தே வரும்
குதிரையின் பெலத்தில் பிரியமில்லை
வீரனின் கால்களில் நோக்கமில்லை
ஒத்தாசை வந்திடும பர்வதம் எனக்குண்டு
அவரையே நோக்கிடுவேன்
எகிப்தின் சேர்க்கையில் மேன்மையில்லை
சேனையின் மிகுதில் பெ(ப)லனுமில்லை
எனக்காக யாவையும் செய்துமுடித்திடும்
சேனைகளின் கர்த்தருண்டு