Lyrics in Tamil:

என் சாயலாய் செதுக்கப்பட்ட
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Lyrics in Tamil:
1. என் சாயலாய் செதுக்கப்பட்ட
என் சுவாசத்தின் சிற்பமே
உன் அழகு முன் லீலி புஷ்ப்பத்தின்
சவுந்தரியம் அற்பமே (2)
நான் உந்தன் தாயே
நீ எந்தன் சேயே
நான் உந்தன் தந்தையே
நீ எந்தன் சிந்தையே
Chorus:
ஏந்துவேன் சுமப்பேன்
தாங்குவேன் தப்புவிப்பேன் – 4
உன் வாழ்வின் நிகழ்வுகள்
ஒவஂவொன்றையும் நன்றாய் அறிவேன்
உன் தவிப்பை நான்
பார்த்துக்கொண்டு சும்மாய் இரேன் (2)
2. கருவிலே தெரிந்துகொண்டு
எழுதப்பட்ட காவியமே
என் உள்ளங்கையில் வரைந்து வைத்த
அழகான ஓவியமே (2)
ஏற்றகாலத்தில் உன்னை
நான் உயர்த்துவேன்
தேற்றரவாளனின் கரங்களில்
அடங்கவே