Ma Kembeera Paattodum

மா கெம்பீரப் பாட்டோடும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. மா கெம்பீரப் பாட்டோடும்
தேவ பட்டயத்தோடும்
ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;
தேவ அன்பின் பாசத்தை
காட்டிப் பாவச் சிறையை
மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம்
பல்லவி
வெல்லும் தேவ சுதனார்
எங்கள் பாவம் மன்னித்தார்;
பயமின்றிப் பாவம் வென்று
ஜெயம் பெறப் போகிறோம்!
2. மெய்யாய் ஜீவ தேவனை
சேவிப்போம் எம் நாயனை
இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;
இவரன்பின் கரத்தால்
நீ மன்னிப் படைந்தால்
பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – வெல்லும்
3. ஜெயம் பெறப் போகிறோம்
பாவம் போக்கச் செல்கிறோம்,
மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்!
இங்கே யுத்தம் முடித்து,
கோடா கோடி ஜெயித்து;
ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம் – வெல்லும்
4. பாவ சாபம் மடிய
பேயின் கூர்மை ஒடிய
தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்!
இரட்சிப்பின் நாள் கிட்டுது,
இத்தேசம் விழிக்குது,
இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்! – வெல்லும்