ma paransey manuvayinare – Maa Paransei Manuvayinaarae

மா பரன்சேய் மனுவாயினாரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மா பரன்சேய் மனுவாயினாரே – Maa Paransei Manuvayinaarae
பல்லவி
மா பரன்சேய் மனுவாயினாரே-யேசு
சரணங்கள்
1.பூவுலகில் நேர்ந்த பாவம் போக்கிடவென்றே பல
ஆவுகளடையும் வீட்டில் அன்பதாகவே-மிகு
ஆவலாகவே-மிகு -ஆசையாகவே-யேசு -மா
2. வானகத்தின் தூதர்பாதம் வாழ்த்திப் பாடவே அங்கு
கானகத்தின் ஆயர் காட்சி-கண்டு கூடவே-பேயோர்
காட்டிலோடவே ஞானோர்-காணத் தேடவே-யேசு -மா
3. உன்னதத்தில் மகிமையது ஓங்கிடவென்றும் இந்த
மண்ணிடத்தில் சமாதானம்-வாய்ந்திட வென்றும்-தூதர்
வாழ்த்திடவன்று-தங்க மங்களமென்றும்-யேசு -மா