1.ma vitivelliye, uthiththu vittaye

மா விடிவெள்ளியே உதித்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.மா விடிவெள்ளியே, உதித்து விட்டாயே,
சுதந்திரம் வீசிடும் வாடா ஜோதியே,
எழும்புவீர்களே, எம் தேசத்தார்களே
சுதந்திரக் காலையை வணக்கம் செய்யவே!
ஸ்தோத்திரம், துதி ஆண்டவருக்கே
என்றென்றும் முழங்கவே!
எக்காள சத்தமே இத்தேசமெங்குமே
சுதந்திரக் காலையைத் தொனிக்கச் செய்யுமே!
2.காரிருள் ஓய்ந்ததே, கால்பூட்டும் மாய்ந்ததே;
சுதந்திரம் சாலவும் ஒளி வீசுதே!
வானாதி வானமே, ஆகாய விரிவே
சுதந்திரக் காலையை வணக்கம் செய்வாயே!
3.இமால்ய மலையே, நீயும் எழும்பியே
சுதந்திரக் காலையை வாழ்த்தல் செய்வாயே!
மா கங்கா நதியே, மா தியானத்துடனே
சுதந்திரக் காலையை வணக்கம் செய்வாயே!