Maamsamellaam pullaipola

மாம்சமெல்லாம் புல்லைப்போல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்
மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போல
அழியும் ஓர் காலமுண்டு
அந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்து
மகிழ்ச்சியால் துள்ளிடுவேன்
வெண்வஸ்திரம் தரித்திடுவேன்
குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்
பளிங்குத் தரையில் உலாவிடுவேன்
ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்
ஆராதனை -4
இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்
மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்
கோடானகோடி தூதருடன்
மனதார உம்மை நான் துதித்திடுவேன்
ஆராதனை -4
ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவே
என் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்
யுகயுகமாய் முகமுகமாய்
தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்
ஆராதனை -4