magimai megathil naan yerivaruvaen

மகிமை மேகத்தில் நான் ஏறிவருவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிமை மேகத்தில் நான் ஏறிவருவேன்
மகிமை ராஜாவை நான் தரிசிப்பேனே – 2
தூதர் சேனையோடு என் ஜெபவேளையில் – 2
ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி
நான் மகிபனை தரிசிப்பேனே – 2
1. முட்செடியின் மத்தியிலே
தோன்றிய மகிமை ஆ… ஆ…
இரட்சகனாய் மோசேயை அழைத்த மகிமை
மேக ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்
பாதை காட்டின மகிமையே மகிமை
2. மேகமாக சீனாய் மலையில்
தங்கிய மகிமை ஆ… ஆ…
தாசனோடு முகமுகமாய்ப் பேசின மகிமை
அக்கினிக் கரங்களால் தேவப்பிரமானத்தை
எழுதிக் கொடுத்த மகிமையே மகிமை
3. ஆசரிப்பு கூடாரத்தை மூடின மகிமை
கூடார வாசலிலே பேசின மகிமை
கிருபாசனம் மீதினில்
கேருபீன்கள் நடுவில் மோசேயோடு
உறவாடின மகிமையே மகிமை
4. ரட்சகரின் இரத்தத்தால் கழுவின மகிமை
ஆலயமாய் என்னையுமே மாற்றின மகிமை
பரலோகத் தகப்பனும் பரிசுத்த குமாரனும்
எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை