Makanae Un Nenja

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?
சரணங்கள்
1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
2. உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்
ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே
3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?
4. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
5. உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே