makimai soroopa mavalla theva

மகிமை சொரூபா மாவல்ல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிமை சொரூபா மாவல்ல தேவா
மன்னா வந்தாளுமே-நின்
மகிமை ஜோதியை மைந்தர்கள் காண
ஐங்காயத்தோடு வாருமே
1.சக்தி இல்லை ஐயா சாம்பலும் தூசியும்
முக்தி அடைய முழங்காலிலிருக்கோம்
பக்தி வளர பரமனை அடைய
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் என்னையே
2.என் ஆசை இயேசுவே உன் ஆசையாலே
மண்ணாசை ஒழித்து பொன்னகர் சேர
உருக்கத்தோடே உள்ளத்தை மாற்றி
உன்னத ஆவியால் நிறைத்திடும் என்னையே
3.சதாகாலத்திலும் இருப்பேன் உன்னோடே
சத்துரு வல்லமையை அழிப்பேன் என்றீரே
சத்துரு கூட்டத்தின் சக்தியை அழிக்க
சர்வாயுத வர்க்கத்தால் உடுத்திடும் என்னையே