makimai velippatum

மகிமை வெளிப்படும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிமை வெளிப்படும்
மாம்சம்மானா யாவையும் கண்டிடும்
தூய ஆவி நம்மை நிரப்ப
மாம்சத்தின் மேன்மை உணர்ந்திடும்
கர்த்தரின் வார்த்தையோ நிலைத்திடும் – மகிமை
1.சோர்விலும் பெலன் தந்து
உன்னை தூக்கியே நிறுத்துவார்
விழுந்திடும் வேளையிலும்
உன் வலம் நின்று ஏந்திடுவார்
அவருக்கு காத்திருந்து
நீ புது பெலன் பெற்றுக்கொள்வாய்
சிறகுகள் விரித்து நீ ஒரு கழுகை போல் எழும்புவாய்
2.கோணலை செவ்வையாய்
அவர் மாற்றியே நடத்துவார்
இடறலின் வலியையும்
சமமாகவே மாற்றுவார்
தலைகளை தாழ்த்தியே
எந்தன் தடைகளை உயர்த்துவார்
பள்ளங்களில் நிரப்பியே
உன் வெறுமையை மாற்றுவார்
3.நடந்திடும் வழி எல்லாம்
உனக்கு மேய்ச்சல் நிலமாகும்
பாதைகள் திறந்திடும்
வறண்ட நிலமும் செழிப்பாகும்
வெட்கமோ வேதனையோ
இனிமேல் என்றும் உனக்கில்லை
ரெட்டிப்பான ஆசியுடன்
முடிவில்லாத மகிழ்ச்சி தொடரும்