Malaimaa Nadhiyo

மலைமா நதியோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ
பல்லவி
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ – எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
சரணங்கள்
1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்
மெல்ல மெல்ல நடந்தே – எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா
2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா
3. பூலோக மேன்மையை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்
ஜீவன் வழி மறை இயேசுவே – அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா
Malaimaa Nadhiyo – மலைமா நதியோ ,lent days songs in tamil lyrics ,Images for lent days , lent days tamil christians songs , christian tamil lent days songs