mamarai pukazhum mariyennum malare

மாமறைபுகழும்மரியென்னும்மலரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மா மணியே (2)
அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த ஆரணங்கே (2)
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே!
பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
வானக வாழ்வை அளிப்பாயே!