mamisamanoor yavarin

மாமிசமானோர் யாவரின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாமிசமானோர் யாவரின்
மேலும் வந்திடும் ஆவியே
எந்தனின் மேலும் வல்லமையாக பொழிந்திடவேண்டுமே
எந்தனின் பெலமெல்லாம் ஒன்றுமில்லை.
என்பதை நானறிவேன்
உந்தனின் ஆவியினால்
எல்லாமாகும் உன்னத தேவனே
உயிர் மீட்சி தாரும் சபைதனின் நடுவே
அருள்மாரி பொழிந்திடுமே பின்மாரி ஊற்றிடுமே
பெந்தெகொஸ்தே நாளதில் அன்று
பலமாய் இறங்கினீரே
உந்தனின் ஜனங்கள் எங்களின்
மீது நிழலிட வேண்டுமே
ஆவியின் வரங்கள் அளவில்லாமலே
அருளிட வேண்டுமே அபிஷேகம் தாருமே
3.இந்த வாலிப நாட்களில் உம்மை
வாஞ்சித்துக் கதறுகிறேன்
என்றும் மாறா இயேசுவே உம்மை
மண்டியிட்டு வேண்டுகிறேன்
உந்தனுக்காக ஊழியம் செய்ய
எந்தனை நிரப்பிடுமே உன்னத பெலனாலே
மாமிசமானோர் யாவரின் பாடல் வரிகள், Mamisamanoar Yavarin Melum lyrics