Manamagizhnthu Paadi Magimai Devanai Lyrics

மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மனமகிழ்ந்து பாடி மகிமை தேவனை உயர்த்தி
கர்த்தரை ஆராதித்து ஆனந்தமாக துதிப்பேன்-2
பாடி பாடி உம்மை ஆராதிப்பேன்
துதித்து துதித்து உம்மை உயர்த்திடுவேன்-2
1.நெருக்கத்திலே விசாலத்தை
தந்து நம்மை நடத்துகிறார்-2
நடத்துகின்ற தேவன் சர்வ வல்ல தேவன்
சர்வ வல்ல தேவன் துதிக்குப் பாத்திரர்-2
2.பாடுகளில் பரமன் இயேசு
கூட இருந்து பெலன் தருவார்-2
பெலப்படுத்தும் தேவன் அகிலம் ஆளும் தேவன்
அகிலம் ஆளும் தேவன் துதிக்குப் பாத்திரர்-2
3.குறைகளில் அற்புதங்கள்
நிறைவாக செய்திடுவார்-2
அற்புதங்கள் செய்யும் அன்பு தெய்வம் இயேசு
அன்பு தெய்வம் இயேசு துதிக்குப் பாத்திரர்-2