mananthirumpi va

மனந்திரும்பி வா -

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மனந்திரும்பி வா
தூரம் போகாதே நீ
என்னை விட்டு தூரம் போகாதே நீ
நானே உன் தேவன்
செவிகொடு என் வார்த்தைக்கு நீ
1. பாவத்தில் விழுவது மிக சுலபம்
அதினின்று மீள்வது மிகக் கடினம்
என் இரத்தத்தால் உன்னை கழுவிடுவேனே
என்னிடம் நீ மனந்திரும்பி வா
2. தனிமையானேன் என்று நீ கலங்காதே
கைவிடப்பட்டேன் என்று சோர்ந்து போகாதே
தாய்ப் போல நான் உன்னைத் தேற்றிடுவேனே
என்னிடம் நீ மனந்திரும்பி வா
3. ஜீவ அப்பம் நான் தானே
உலகிற்கு ஒளியாய் உன்னை மாற்றுவேனே
உன்னோடு கூட நான் இருப்பேனே
என்னிடம் நீ மனந்திரும்பி வா