manathin valikal marainthituthe!

வாழ்க்கை இனித்திடுதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மனதின் வலிகள் மறைந்திடுதே!
மாற்றம் உள்ளுக்குள் நிகழ்ந்திடுதே !
மனதின் வலிகள் மறைந்திடுதே!
மாற்றம் உள்ளுக்குள் நிகழ்ந்திடுதே !
வழிகள் புதிதாய் திறந்திடுதே!
உம் வார்த்தையால் வாழ்க்கை இனித்திடுதே!
வழிகள் புதிதாய் திறந்திடுதே!
உம் வார்த்தையால் வாழ்க்கை இனித்திடுதே!
வசனங்கள் பனித்துளியாய் நனைத்திடுதே நனைத்திடுதே!
உம் வார்த்தைகள் வழித்துணையாய் தொடர்ந்திடுதே பின் தொடர்ந்திடுதே!
வசனங்கள் பனித்துளியாய் நனைத்திடுதே நனைத்திடுதே!
உம் வார்த்தைகள் வழித்துணையாய் தொடர்ந்திடுதே பின் தொடர்ந்திடுதே!
பாவத்தின் மயக்கத்தில் விழுந்தேன் கலக்கத்தில்
சோகத்தின் நெருக்கத்தில் விரைந்தீர் என்னிடத்தில்
வாழ்வழிக்கும் வார்த்தை எல்லாம் உள்ளது உம்மிடத்தில்…
அதை தினமும் கடைபிடித்தால் சேர்ப்பீர் பரலோகத்தில்…
வசனங்களை புதுக்கவியாய் கவிப்பேனே துதிப்பேனே!
உம் வார்த்தைகளால் வாலிபத்தை நிறைப்பேனே சென்றுரைப்பேனே!
வசனங்களை புதுக்கவியாய் கவிப்பேனே துதிப்பேனே!
உம் வார்த்தைகளால் வாலிபத்தை நிறைத்தேனே சென்றுரைத்தேனே!
தென்றலின் இசையில் நகர்ந்திடும் திசையில்
பாடுவேன் இசையில் அகமகிழ்ந்தே!
உன் திருமறையின் வாக்குகள் எண்ணி
மெய்சிலிர்த்திடுவேன் என்னை மறந்தே!