mangala naan poondidum vaelaiyil

மங்கல நாண் பூண்டிடும் வேளையில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மங்கல நாண் பூண்டிடும் வேளையில்
மங்கலனே உம்மை அழைக்கின்றோம்
இம்மண வேளையில் எம்மணவாளனே
வந்திங்கு ஆசீர் பொழிந்திடுமே
உம்முன் நிலையில் தொடங்கும் இப்பந்தம்
நிலை பெற்று என்றென்றும் ஓங்கிடவே
முப்புரி நூலாய் குடும்பத்தின் தலையாய்
இவர்களை நிதம் வழி நடத்திடுமே
சத்திய தேவன் முன் கொடுத்திட்ட வாக்கினை
பத்திரமாய் இவர் காத்திடவே
நித்திய அன்பும் மகிழ்ச்சியும் பெருக
உந்தனின் கிருபையை ஈந்திடுமே