Manitham Ingae Vaalanum Christmas song lyrics

மனிதம் இங்கே வாழனும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தன்னே னன்னானே தானே தானே னன்னானே 2
தன்னன்னே தானே னன்னே தானே னன்னானே 2
ஓ… ஓ.. தன்னே னன்னானே தானேனானே தானே னன்னானே
தன்னே னன்னானே தானேனானே தானே னன்னானே
மனிதம் இங்கே வாழனும் மனதில் அன்பு சேரணும்னு மண்ணில் நம்ம யேசு பிறந்தார்
மாட்டு கொட்டகையில் யேசு பிறந்தார்
ஏழ நிலம மாறனும் ஏற்றத் தாழ்வு போகணும்னு குரல் கொடுக்க யேசு பிறந்தார்
கடும் குளுரில தான் யேசு பிறந்தார்
1.தாயும் தந்தையும் ஏழ தான் ஆனாலும் மனசில தான் அன்பு அதிகம்
தச்சு வேல செஞ்சி ஒழச்சி தான் வாழ்ந்ததாலே மக்களோட உறவு அதிகம்
ஒழைக்கும் மக்களோட உறவு அதிகம்
இந்த குடும்பத்தில யேசு பிறந்தார் ஏழ வாழ்வுக்குத்தான் வழியும் சொன்னார்
அன்பு குடும்பத்தில யேசு பிறந்தார் ஏழ வாழ்வுக்குத்தான் வழியும் சொன்னார்
நாம சந்தோஷமா வாழவேணுங்க வாழ்வில் நம்பிக்கையும் சேர வேணுங்க
2.ஆடு மாடு மேச்சி பொழச்சி வந்த எடயருங்க கொழந்தைய தான் காண வந்தாங்க
ஆட்டுக்குட்டியையும் பாலையுமே காணிக்கையா கொடுத்துபுட்டு வணங்கி நின்னாங்க
அவங்க ஒழச்சி வந்த பலன தந்தாங்க
பெரும் அரசரெல்லாம் காணும் முன்பாக இந்த ஆட்டிடையர் கண்டோமுன்னாங்க
அந்த ஆண்டவனும் நம்ம பக்கம் தான் என்றே ஆனந்தமாய் வாழச் சென்றாங்க