manithan thurookam seyyum poothu thuthiththen thunaiyay

மனிதன் துரோகம் செய்யும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய்
நின்றிரே
உறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை
தந்தீரே
என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு
இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2
1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும்
தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2
ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2
பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2
2 . அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும்
எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் – 2
ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் – 2
உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் – 2