mannay irukkum manithane onnu sonna keppiya

மண்ணாய் இருக்கும் மனிதனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

மண்ணாய் இருக்கும் மனிதனே ஒன்னு சொன்னா கேப்பியா
பொன்னான தவக்காலத்தில் மனம் மாறமாட்டியா
கடந்துவந்த பாதையை நீயும் திரும்பி பாரையா
திருந்திவாழ இன்று திரு சாம்பல் பூசையா
திருந்திவாழ இன்று புது சாம்பல் பூசையா
மனசு மாறி பகைவரோடு பரிவுகாட்டனும் இனி
மகிழ்ச்சியோடு நோன்பு இருந்து ஜெபித்து வாழனும்
சிலுவைகளை சுமந்துகொண்டு நடந்து போகனும் உன்
சிலுவைகளை சுமந்துகொண்டு நடந்து போகனும் நீ
சிலுவை நாதர் யேசுவையே திரும்பி பாக்கனும்
மரணம் உன்னை நெருங்கும்போது திருந்த முடியுமா நீ
இத்தனை நாள் செய்த பாவம் அழிந்து போகுமா
மனந்திரும்பி இறையரசை சுவைத்துப் பாரையா நீ
மனந்திரும்பி இறையரசை சுவைத்துப் பாரையா இந்த
தபசுகாலம் உனக்கு நல்ல பரிசு தானையா
மண்ணாய் இருக்கும் மனிதனே பாடல் வரிகள், Mannaai Irukkum Manithanae lyrics