mannippu tharumaiya en manavalane

மன்னிப்பு தாருமையா என் மணவாளனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மன்னிப்பு தாருமையா என் மணவாளனே
எனக்குள் வாருமையா என் எஜமானனே
மணவாளனே மணவாளனே
எஜமானனே என் இயேசு ராஜனே – 2
பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா
உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா
பரிசுத்தரே என்னைப் படைத்தவரே
பாவம் போக்க பலியானீரே – 2
நான் உந்தன் பாதம் சரணமையா
... மணவாளனே
எந்தன் மனதில் ஆறுதலில்லை
என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா
என் ஆறுதலே என் ஆண்டவரே
யாரிடம் நான் போவேனையா – 2
நான் உம்மிடம்தான் சொல்வேனையா
... மணவாளனே
உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்
புது ஆவியாலே நிரப்பிடுமையா
என் புகலிடமே என் புது பெலனே
உந்தன் சாயலாக மாற்றுமே – 2
உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்
... மணவாளனே