mannulakam poorrum manna

மண்ணுலகம் போற்றும் மண்ணா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மண்ணுலகம் போற்றும் மண்ணா
வின்னவரின் செல்ல கண்ணே
ஏழையின் குடிசையில்
பிறந்து வந்தாய் இந்நாள்
1.அல்லிவிழி மெல்ல எழ பாடுகின்றோம் பாட்டு
பாலகனே கண்திறப்பாய்
ஓசைதனை கேட்டு
மண்ணுயிர் காக்கவே
தண்ணுயிர்ந்தவா
மண்ணுயிர் காக்க
தண்ணுயிர்ந்தவா
வல்லமையாலே
வையகம் யாவும் தழைக்க வேண்டுமே
உமது ஆசிரை தாருமே – மண்ணுலகம்
2.விண்ணில் வெள்ளி ஜோலிக்கவே
வானில் நாமும் காண
விண்ணவர் மேன்மை மண்ணில் காண
மரியின் மைந்தனாக
வின்தூதர் பாடவே
மன்னோர்கள் போற்றவே
வின்தூதர் பாடவே
மன்னோர்கள் போற்றவே
விரைந்து வாரும் வாஞ்சையோடு
வல்லவன் கரத்திலே
தேவ பாலரின் பாதத்திலே – மண்ணுலகம்