Mano Magilvodae Anaivru vaarum song lyrics

மனோ மகிழ்வோடே அனைவரும் வாரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

மனோ மகிழ்வோடே அனைவரும் வாரும்
வாரும் வாரும் பெத்லகேம் ஊருக்கு
பாருங்கள் தேவ தூதரின் ராசாவை
வாரும் வணங்குவோமே – 3 – பாலனை
மந்தையை விட்டேதான்
மாட்டுத் தொட்டி நோக்கி
வந்து இடையர்கள் வணங்கினர்
சந்தோஷமாக நாமும் போவோம் வாரும்
வாரும் வணங்குவோமே – 3 – பாலனை
அநாதி பிதாவின் அநாதிச் சுடரை
மனித வேஷமாகக் காணுவோம்
துணிகளாலே சுற்றிய பாலனை
வாரும் வணங்குவோமே – 3 – பாலனை