mantharkalin pavam pookka

மாந்தர்களின் பாவம் போக்க
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மாந்தர்களின் பாவம் போக்க
மண்ணுலகைத் தேடி வந்த
மன்னவரை என்றும் பாடுவோம்
ஓசன்னா-8
ஓசன்னா ஓசன்னா பாடுவோம்
ஓசையுள்ள கைத்தாளம் போடுவோம்
1.தம்மைப் போல நம்மை மாற்ற மனுவாகவே
மண்ணில் வந்து அவதரித்தார் நம் தேவனே
அவர் நாமத்தை எப்போதும் துதிப்போம்
தினம் தப்பாமல் அவர் வழி நடப்போம் -ஓசன்னா
2.நமக்காக பாலகனாய் பிறந்தாரே
மரியாளின் மடியினிலே தவழ்ந்தாரே
விண்ணின் மேன்மையை நம் இயேசு வெறுத்தார்
மண்ணில் தாழ்மையாய் அவர் வந்து உதித்தார் -ஓசன்னா
3.அதிசயரே ஆலோசகரே
நம் இயேசுவே சமாதான பிரபு இவரே என்றென்றுமே
அவர் நாமத்தை சொன்னாலே போதும்
இங்கு இன்னல்கள் பறந்தே போகும்