maraavin thanneerellam mathuramaagum

மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாகும்
கசந்து போன உந்தன் வாழ்வு கழிப்பாகுமே
இயேசுவின் அன்பு (2) உன்னை அழைக்குது
ஏற்றுக்கொண்ட மனிதனுக்கு
வாழ்வு கொடுக்குது இன்றே
1. பட்டுப்போன உந்தன் வாழ்வு
பசுமையாகிடும் விட்டுப்போன
நன்மை உன்னை தேடி வந்திடும்
பாலைவனமாய் புனர்வாழ்வு
சோலையாகிடும் காலைதோறும்
கர்த்தர் கிருபை உன்னை சூழ்ந்திடும்
2. பாவ பாரம் உந்தன் மந்தை
பாரப்படுத்துதோ குடும்ப பாரம்
உந்தன் மந்தை குழம்ப செய்யுதோ
கடனின் பாரம் உந்தன் மந்தை
கவலையாக்குதோ சிலுவை பாரம்
சுமக்க இயேசு உன்னை அழைக்கிறார்
3. மாயையான பாவபாரம் வெறுத்து தள்ளிட்டு
மகிமையான ஜீவ வாழ்வை இன்றே நாடிடு
தேவராயம் தேவநீதி முதலில் தேடிடு
தேவையெல்லாம் கூடத்தருவார் அவரை நம்பிடு