marainthum maraiya malarkale

இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

மறைந்தும் மறையா மலர்களே
மறைந்தும் நம் கண்களை விட்டகலா
மலர்களே
வாழும் பொழுதெல்லாம் எம்மை செப்பனிட்ட செம்மல்களே
அன்பையும் சமாதானத்தையும் எமக்குள் உரமேற்றிய அருந்தவங்களே
இறை பக்தியையும் இறை நம்பிக்கையையும் சொல்லிக் கொடுத்த தெய்வப் பிறவிகளே
மரணித்தும் எமக்காக பரிந்து பேசும் ஊமை விழிகளே
சாதிப்பதற்கும்,பிரச்சினை சந்திப்பதற்கும் எமக்காக கலங்கிய கருணை கடல்களே
பெற்று சீராட்டிய பெருந்தவமே
ஒன்றாய் விளையாடிய சகோதரமே
உறவாடி மகிழ்ந்த சொந்தங்களே
நினையா நேரத்தில் மறைந்த நிஜங்களே
உம் பசுமை நினைவுகளை மாலையாக்குகிறோம் உம் கல்லறையில் சூட்ட
உம் உயர்ந்த மதிப்புகளை கோர்க்கிறோம் எம் மனங்களில் மாட்ட
உம் பரிந்துரைகளை நாடுகிறோம் எம் சந்ததியினருக்காக….
உம்மை நினைத்து அழாமல் உம்மை நினைத்து வளர்வோம்
வாழும்போது வளர்த்தவர்களே
மறவோம் என்றும் உங்களையே !