Marakka Paduvathillai Naan

மறக்கப்படுவதில்லை நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல
தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர்
உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்