Maranthane Manthil Vaikkavillai

மறந்தேனே மனதில் வைக்கவில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை
மறந்தேனே மனதில் வைக்கவில்லை விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2
வேதனை வந்தபோது தேவன் இல்லை என்றேன் துன்பம் நிறைந்தபோது தூரம் போனேன்-2
ஏமாற்றம் வந்த போது வார்த்தையை கொட்டினேன்-2
உடைந்தவளாய் நான் உம்மை மறந்தேன்(இழந்தேன்) -2
ஒன்றுக்கும் உதவாத என்னைத் தேடி வந்தீர் இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர்-2 வெட்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர்-2
நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர்-2
சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ-2
இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ-2
மீட்டது உந்தனின் ரத்தம் தானோ நிலைப்பது உந்தனின் கிருபை தானோ-2 {மறந்தேனே}