maranthitaathae nee mannavan

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற மறந்திடாதே நீ
1. பாலைவனமதில் வாழுகின்றார் சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி வாழுகின்றார் சிலர்
பகலிரவெதிலும் உழைக்கின்றார் .. இவர்களை
2. வானமெட்டும் வண்ண மாளிகையில் சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் .. இவர்களை
3. பற்பல தேசத்தில் வாழுபவர் பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் .. இவர்களை