markazhi kulirinile

மார்கழி குளிரினிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மார்கழி குளிரினிலே
மாபரன் பிறந்துள்ளார் -2
மாமரியின் மடியினிலே -2
மனிதனை மீட்க வானகம் சேர்க்க
புவிதனில் மலர்ந்துள்ளார்
புதுமையாய் புலர்ந்துள்ளார்
தூதர்கள் கூட்டம் பாட்டிசைக்க மேய்ப்பர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க -2
நட்சத்திர கூட்டம் வழி அமைக்க ஞானியர் கூட்டம் பரிசளிக்க
மண்ணில் மகனாய் மனுவானர்
மரிமகனாய் மனுமகனாய் -2
பூமிக்கு வந்த பூமகனாய்
உம் பிறப்பில் அகிலம் எந்நாளும் மகிழ்ந்திட -2
ஈசாய் மரத்தின் அடி தண்டாய் தாவீது வம்சத்தின் குலவிளக்காய் -2 பள்ளங்கள் மேடுகள் நிரம்பிடவே
கோணலானதை நேராக்கவே தரணியில் உதித்த மாதவனே இன்பங்கள் வாழ்வினில் நிறைந்திட-2 துன்பங்கள் யாவும் மறைந்திட -2
பாரினில் யாவர்க்கும் அமைதியை வழங்கிட