maruroobam maruroobam maruroobam

மறுரூபம் மறுரூபம் மறுரூபமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மறுரூபம் மறுரூபம் மறுரூபமே – Maruroobam Maruroobam Maruroobamae
மறுரூபம் மறுரூபம் மறுரூபமே
மகிமையானதோர் அனுபவமே
மாம்ச சாயல் முற்றும் மாறிடுமே
மகிபனின் சாயல் வந்திடுமே
எங்கள் தேவனே இயேசு ராஜனே
என்னை ஆட்கொண்டே தெய்வமே
இந்த நாளிலே இந்த வேளையிலே
என்னை மறுரூபமாக்கிட வாருமே
எழுப்புதல் மேகம் எழும்ப செய்வது
கருத்தான ஜெபத்தின் மறுரூபம்
ஆத்தும பாரத்தால் மன்றாடி ஜெபிப்பது
உத்தம கிறிஸ்தவனின் மறுரூபம்
சங்கீதங்கள் பாடி உணர்வுள்ள உள்ளத்தால்
ஆவியில் நிறைவது மறுரூபம்
சமயம் வாய்த்தாலும் வாய்க்காமல்
போனாலும் சாட்சி பகிர்வது மறுரூபம்
சின்னஞ்சிறு தவறோ ரகசிய பாவமோ
செய்யாமல் இருப்பது மறுரூபம்
சிந்தனையில் பரிசுத்தம் காத்துக் கொள்வதே
தனிப்பட்ட வாழ்வின் மறுரூபம்
காண்போர் வியந்திட அனுதின வாழ்வில்
அன்பினை காட்டுவது மறுரூபம்
துரோகம் செய்தவனை சிநேகிதன்
என்பது சமுதாயம் போற்றும் மறுரூபம்