Meiyello Engal Seanai

மெய்யல்லோ எங்கள் சேனை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
மெய்யல்லோ எங்கள் சேனை முன்னேறியே செல்லுது!
செவ்வையாய் அணிவகுத்து சிறை மீட்கப் போகுது!
சரணங்கள்
1. பேயல்லோ நம்மைப் பிடித் திழுத்துத் திரிந்தான்
ஜெயமுள்ள நாதனல்லோ சேனையிலே சேர்த்தார் – மெய்யல்லோ
2. தேவாதி தேவன் தான் எழுப்பின சேனையார்
தீயாலும் இரத்தத்தாலும் பகைவரை எதிர்ப்பார் – மெய்யல்லோ
3. கேடகத்தைக் கொண்டு பேயைத் தத்தளிக்கச்
செய்வோம் வாடாமுடி பெற்றிடவே கெம்பீரமாய்ப் பாடுவோம் – மெய்யல்லோ
4. யுத்தங்கள் முடிந்து நல் வெற்றிகளைப் பெற்றபின்
நித்தமுமே நாதருடன் நீடுழியாய் வாழலாம் – மெய்யல்லோ