mekamay munsellum pirasanname

மேகமாய் முன்செல்லும் பிரசன்னமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மேகமாய் முன்செல்லும் பிரசன்னமே
என்னை நீர் நடத்திடுமே
செங்கடல் பிளந்து யோர்தானை கடந்து
எரிகோவை தகர்த்து கானானில் நுழைந்திட
பிரசன்னமே பிரசன்னமே
முன்சென்று நடத்திடும் பிரசன்னமே
மகிழணுமே மகிழணுமே
ஆனந்த கானானில் மகிழணுமே
தாகத்தோடே வருபவற்கு
ஜீவத் தண்ணீரண்டை நடத்திடும் பிரசன்னம்
மாராவினால் கசந்த (இவ்)வாழ்விற்கு
மதுரமாம் நீரூற்றில் நடத்திடும் பிரசன்னம்
வாஞ்சையோடே வருபவற்கு
வானத்தின் மன்னாவால் வழிகாட்டும் பிரசன்னம்
வனாந்திரத்தில் சோர்ந்திடாது
வல்ல கரத்தாலே நடத்திடும் பிரசன்னம்
வருத்தத்தோடே வருபவற்கு
வழி எங்கும் தோளிலே சுமந்திடும் பிரசன்னம்
சோதனைகள் நெருங்கிடாமல்
செல்லும்வழி தனை காட்டிடும் பிரசன்னம்