mekasthampam neengkathanappa

மேகஸ்தம்பம் நீங்கதானப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மேகஸ்தம்பம் நீங்கதானப்பா
அக்னிஸ்தம்பம் நீங்கதானப்பா
சொந்தபந்தம் நீங்க இயேசப்பா
எங்க எல்லாருக்கும் நீங்க இயேசப்பா
1. கலங்கின நேரமெல்லாம்
என்னை அரவணைத்து காத்தவரே
கஷ்டப்பட்ட நேரத்தில் எல்லாம் – எனக்கு
கைகொடுத்து உதவினீரே ,
2. கோடி கோடி ஜனங்களிலே – எம்மை,
கூட்டி சேர்த்த அன்பின் தெய்வமே ,
தாங்கி ஏந்தி சுமந்தவரே
தாய் தந்தையிலும் சிறந்தவரே ,
3. நிரந்தரம் நீங்கதானப்பா
எங்க நிம்மதியும் நீங்கதானப்பா ,
உம் சமூகம் எந்தன் முன்னே
நன்மை கிருபையும் தொடரும் பின்னே
மேகஸ்தம்பம் நீங்கதானப்பா பாடல் வரிகள், Megasthambam Neengadhanapa Lyrics