Mey Porul Yaarentru Ariyaatha Maantharkal

மெய் பொருள் யாரென்று அறியாத

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
வையகமெல்லாம் தேடுகின்றார் பல
வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார்
என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று
எடுத்துச் சொன்னவர் இயேசு
இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி
தன்னை அளித்தவர் இயேசு
கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்
கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது
கடைவீதியில் வந்து வியாபார பொருளாகி
காசுக்காக போகும் விற்பனையே
சத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த
சித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே
மெய் பொருளே இயேசு மெய் பொருளே
இயேசு மெய் பொருளே
இப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை
இருப்பதெல்லாம் இயேசு திருவருளே