1.meyth thevanaith thuthi per nanmai seythar

மெய்த் தேவனைத் துதி பேர் நன்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.மெய்த் தேவனைத் துதி பேர் நன்மை செய்தார்
குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்
உன் பாவத்துக்காய் யேசு மரித்தார்
நீ ஜீவனைப் பெற ஆருயிர்த் தந்தார்.
போற்றுவோம்! போற்றுவோம்! ஜீவ நாயகரை
நம்புவோம்! நம்புவோம்! லோக ரட்சகரை!
ஓ! ஏசுவின் மூலம் நற்கதி உண்டாம்
பிதாவின் சமூகம் கண்டடையலாம்.
2.சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்
தம் வாக்கை அன்பர்க் கருள்வேன் என்றனர்
எப்பாவியானாலும் விசுவாசம் வைத்தால்
அந்நேரமே மன்னிப்புண்டாம் ஏசுவால்.
3.அதிசயமான அன்பின் பெருக்கே!
ஏசுவினாலே வரும் மகிழ்ச்சியே!
அந்நாளில் இயேசுவை பார்க்கும் போது
உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ?