Minnum Vellangi

மின்னும் வெள்ளங்கி பூண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

1. மின்னும் வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில் (பொன்னகர் வீதி எங்குமே )
பல் கோடியாய்ச் செல்வார் (பண்பாக நிற்கிறார் )
வெம் பாவம் சாவை இவர் (வெம் பாவம் சாவை எல்லாம் )
வென்றார் போர் ஓய்ந்ததே (வென்றே போர் ஓய்ந்ததரே )
செம் பொன்னாம் வாசல் திறவும்
செல்வார் இவர் உள்ளே.
2. முழங்கும் அல்லேலூயா
மண் விண்ணை நிரப்பும்
விளங்கும் கோடி வீணைகள்
விஜயம் சாற்றிடும், (மா வெற்றி சாற்றிடும்)
சராசரங்கள் யாவும்
சுகிக்கும் நாள் இதே;
இராவின் துன்பம் நோவுக்கு (தராதலத்தின் துன்பமும் )
ஈடாம் பேரின்பமே. (தொலைந்து போயிற்றே)
3. அன்பான நண்பர் கூடி
ஆனந்தம் அடைவார்;
மாண்பான நேசம் நீங்காதே (மாண்பான நேசம் எந்நாளும் )
ஒன்றாக வாழுவார்; (மங்காமல் வாழுவார்)
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்
மண்ணில் பிரிந்த உயிர்கள் (அண்ணலே தஞ்சம் ஆகையால்)
மீளவும் சேர்ந்திடும் (அபாயம் நீங்கிடும். )
4. சிறந்த உந்தன் மீட்பை
சமீபமாக்குமே
தெரிந்து கொள்ளப்பட்டவர் (தெரிந்து கொள்ளப் பட்டோரின்)
தொகை நிரப்புமே;
உரைத்த உந்தன் காட்சி
உம்பரில் காட்டுவீர் (உயர்வில் காட்டுவீர்)
இறைவா, ஏங்கும் தாசர்க்கு
இறங்கி வருவீர்.