Mudhal Mariyathai umakkae

முதல் மரியாதை உமக்கே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs collection.

Mudhal Mariyathai umakkae – முதல் மரியாதை உமக்கே
Song: Mudhal Mariyathai umakkae (முதல் மரியாதை உமக்கே)
Album: UmNesame – Holy Spirit Series (உம் நேசமே- பரிசுத்த ஆவியானவரே)
Artist: anbanJUDYthimotheu (அன்பன்.JUDY தீமோத்தேயு)
Production: JUDYmission Media
பாடல் வரிகள்
(ஆர்ப்பரித்து வரவேற்பு வசனங்கள் சங்கீதம் 135:4,5,6)
முதல்மரியாதை உமக்கே முழு மகிமையும் உமக்கே – செலுத்த
எங்களுக்கு வாய்ப்பை தந்திரே தேவா தேவா – கொடுக்க
எங்களுக்கு வாழ்க்கை கொடுத்தீரே தேவா தேவா
இருகரம் கூப்பி உம்மை வரவேற்கிறோம்
இருகரம் தட்டி உம்மை ஆர்ப்பரிக்கின்றோம்
இரு கரம் அசைத்து உம்மை ஆராதிக்கின்றோம் தேவா தேவா
உம்மை வரவேற்கிறோம்! ஆராதிக்கின்றோம்! ஆராதிக்கின்றோம் தேவா.. -2
1. சேற்றில் புரண்ட வாழ்க்கை வாழ்ந்தேன்
ஊற்றுத்தண்ணீராய் என்னைக் கழுவ வந்தீர் – நீர்
கற்றுத்தந்த அன்பை முற்றும் மறந்து வாழ்ந்த – என்னை
பெற்றெடுக்க சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
2. என் பாவம் போக்க சாபம் நீக்க
எனக்காக திறக்கப்பட்ட ஜீவஊற்றே
உலர்ந்த எலும்பாய் எங்கும் சிதறிப்போன – என்னை
உயிர்பிக்க வந்த பரலோக காற்றே
3. புறஜாதியானேன் புறந்தள்ளப்பட்டேன்
தேவனுக்காய் மீட்டெடுக்க அடிக்கப்பட்டீர்
தேவனின் ராஜரீக ஆசாரியராக்க
எனக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே!