Munnorin Deivamam

முன்னோரின் தெய்வமாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

1.முன்னோரின் தெய்வமாம்
உன்னத ராஜராம்;
அநாதியானோர் அன்பராம்
மா யெகோவா.
சர்வ சிருஷ்டியும்
உம் பேர் நாமம் சாற்றும்;
பணிந்து போற்றுவோம் என்றும்
உம் நாமமே
2.உன்னத பரனை
தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே
என்றிசைப்பார்;
நேற்றும் இன்றும் என்றும்
இருக்கும் கர்த்தரும்
மா யெகோவா நம் பிதாவும்
துதி ஏற்பார்.
3.மீட்புற்ற கூட்டமே,
மா நாதர் போற்றுமே;
பிதா சுதன் சுத்தாவிக்கே
துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும்
தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும்
உண்டாகவும்.